2025 மே 07, புதன்கிழமை

'ஓய்வுபெறுவோர் பல்வேறு தாக்கங்களுக்குட்படுகின்றனர்'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தினமும் அலுவலகத்துக்கு கடமையாற்றி வருவோர் திடீரென ஓய்வுபெறும்போது பல்வேறு தாக்கங்களுக்குட்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேம்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அலுவலகங்களில் கடமையாற்றி ஓய்வுபெறும் நிலையில் உள்ள முதியவர்களுக்கான விசேட செயலமர்வு இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு துறைகளில் கடமையாற்றி ஓய்வுபெறும் நிலையில் உள்ள 121பேர் கலந்துகொண்டனர்.

இதன்போது,உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வுபேற்றுச்செல்லும் போது, சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவான மனோநிலையை வளர்த்துக்கொள்ளல்.அவர்களின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பில் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

அவர் மேலும் கூறுகையில்,

ஒருவர் காலையில் தொழிலுக்கு சென்று மாலை வீடு திரும்பி வரும் நிலை தொடர்ச்சியாக நடைபெற்றுவரும்போது திடீரென அவருக்கு ஓய்வு வழங்கப்படும்போது  அவர் உளவியல், பொருளாதார ரீதியான தாக்கத்துக்குட்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில், ஓய்வுபெற்றுச்செல்லவுள்ளோரை தயார்படுத்தும் நோக்குடன் வளவாளர்களைக்கொண்டு தொடர்ச்சியான அறிவூட்டல், தெளிவூட்டல், வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கையெடுத்து வருகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X