Suganthini Ratnam / 2017 மே 04 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இன்று (4) மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீ.சீ..ரீ.வி கமெராவை பல்கலைக்கழகக் கண்காணிப்பிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும், பட்டப்படிப்பை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும், முறையற்ற வகுப்புத் தடையை உடனடியாக நீக்க வேண்டும், மகாபொல கொடுப்பனவை உரிய நேரத்தில் வழங்க வேண்டும், மாணவர் ஒன்றியத்தை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது விடுதிகளிலிருந்து பதாகைகளுடன் பல்கலைக்கழக நுழைவாயில்வரை வந்த மாணவர்கள், பேரவைக்கு முன்பாகச் சென்று கோஷங்களையும் எழுப்பினர்.

6 minute ago
19 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
26 minute ago
1 hours ago