Suganthini Ratnam / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வீட்டையும் பாடசாலைச் சூழலையும் பிரதேசத்தையும் சுத்தமாக வைத்திருப்பதில் மாணவர்களின் பங்கு அளப்பரியது என செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'டெங்கு நோய் அச்சுறுத்துகின்ற ஒன்றாக தற்சமயம் மாறியுள்ளது. இந்த அச்சுறுத்தலை வெறுமனே சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரமோ, அன்றேல் நிர்வாக அதிகாரிகள் மாத்திரமோ தனித்தனியே ஒழித்துவிட முடியாது. இது ஒரு கூட்டு முயற்சியினால் சாதிக்க வேண்டிய விடயம். அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கூடாக டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள், அதிபர்கள், ஏனைய அதிகாரிகள் இருந்து பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்டி வீட்டையும் நாட்டையும் பாதுகாக்க முடியும்.
பிரதேசப் பாடசாலை மாணவரிடையே டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக சித்திரம் வரைதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடாத்தப்பட்டு அவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் கௌரவிப்பும் வழங்கப்படுகின்றன' என்றார்.
இந்நிகழ்வில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஐ.சிறிநாத், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.கிருஷ்ணபிள்ளை, யுனொப்ஸ் திட்ட அதிகாரிகள், ஏறாவூர் பொலிஸ், பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago