Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 07 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
'சாத்வீக ரீதியில் மக்கள் பேராட்டங்களை நடத்துவதன் மூலம் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிகப்பட்ட தமது பூர்வீக நிலங்களை அவர்கள் மீட்டெடுக்க முடியும் என்ற நிலைமை தற்போது எமது நாட்டில் உருவாகியுள்ளது' எனத் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கிரான் பிரதேச மக்களுடைய காணிப் பிரச்சினை தொடர்பாக ஆராயும் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று (7) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'மட்டக்களப்பிலுள்ள சில பாடசாலைகள் மற்றும் தனியார் காணிகளில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் முகாம் இட்டுள்ளனர். இவற்றை விடுவிப்பது தொடர்பாக பல தடவைகள் நாம்; முயற்சி எடுத்தபோதும், இன்னும் விடுவிக்கப்படவில்லை.
1990ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்த பின்னர், முறக்கொட்டாஞ்சேனையிலுள்ள பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் அப்பாடசாலையை அண்டியுள்ள 45 பேருக்குச் சொந்தமான காணிகளை உள்ளடக்கி இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் புணானை இராணுவ முகாம், வாகரை இராணுவ முகாம், குருக்கள்மடம் இராணுவ முகாம், களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் ஆகியவை அரசாங்க அலுவலகக் காணிகள், பாடசாலைக் காணிகள் மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, பாதுகாப்புத் தரப்பினரால் முகாம்;களை அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரி சாத்விக முறையில் போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை எமது பிரதேசங்களிலும் தோன்றியுள்ளது.
வடமாகாண மக்கள் துணிந்து அறவழிப் பேராட்டங்கள் நடத்துவதன் மூலம் தங்களின் காணிகளை மீட்பதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். போராடாமல் எதையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தற்போது தமிழ்ச் சமூகம் காணப்படுகின்றது' என்றார்.
15 minute ago
27 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
46 minute ago
1 hours ago