2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
சர்வதே நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 
நாடாளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (01) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'சிறுபான்மையின மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம், காணாமல் போனோரின் உறவுகளினால்; முன்னெடுக்கப்படும் அகிம்சை ரீதியான போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றது.
 
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்தது இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடியுங்கள் என வலியுத்தி பாரிய உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்கள் .
 
காணாமல் ஆக்கப்பட்டோர் வெளிநாடு சென்றிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து எமது மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இது ஒரு நாட்டின் பிரதமர் கூறக்கூடிய கருத்து அல்ல. பிரதமர் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
 
பிரதமரின் இந்த கருத்து நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறதா? வெளிநாடுகளுக்கு சென்றிருப்பார்கள் என்றால் பிரதமரா அனுப்பிவைத்தார் என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது'  என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X