2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'த.தே.கூ, மு.கா தலைவர்கள் ஆட்சியை மாற்றுவதற்கு பெரும் பாடுபட்டவர்கள்'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் இந்த நாட்டில் ஏற்கெனவே இருந்த ஆட்சியை மாற்றுவதற்கு பெரும் பாடுபட்டவர்கள் எனக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே இந்த நாட்டிலுள்ள மூவின மக்களும் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தொகுதிக்கான  திறப்பு விழா இன்று   (01) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,  'கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் தலைமையில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறைக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே சுகாதார அமைச்சராக இருந்த காரணத்தனால், சுகாதாரத்துறை பற்றிய சகல பிரச்சினைகளையும் அவர் தெரிந்தவராக உள்ளார்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X