Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 08 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெண்களின் உழைப்பில்; பெறுமதி இருப்பதால், அரசாங்கத் தரப்பினர் பெண்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இன்று (8) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வி;ல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாற கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தற்போது இந்த நாட்டின் அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் காணப்படுகின்றனர். அவர்களி;ன் கடின உழைப்பி;ல் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கி;ன்றன.
ஆண்களைப் போலவே பெண்களும் இன்று வேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ஊதியம் பெறுகி;ன்றனர்.
முறைசாராத் தொழில்களிலும் பெண்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, பெருமளவு சம்பாதி;த்து தொழில் வழங்குநர்களாக மாற்றம் பெற்றுள்ளமையையிட்டு பெண் சமுதாயம் பெருமை காண்கின்றது' என்றார்.
'மேலும், பெண்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக மாற்றுக் கருத்துகள் சரியாக முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது.
பெண்கள் பொறுமை, அடக்கம் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிராத சந்தர்ப்பத்தில் பெண்மை இழந்தவள் என்று இந்தச் சமூகம் முத்திரை இடுகின்றது. எது எவ்வாறிருப்பினும், பெண்களின் ஆதரவு இன்றி எந்தத் தனி மனிதனும் முன்னேறியதாக வரலாறு கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago