Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னர் நாம் எந்த நிலைமையில் இருந்தோமோ, அந்த நிலைமை இருக்கக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால், இந்த நாட்டில் அனைவரும் ஒரு தாய், பிள்ளை போல் வாழும் நிலைமை ஏற்படும்' எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தென்றல் சஞ்சிகையின் 32ஆவது இதழின் அறிமுக நிகழ்வும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் கல்லடியில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'இந்த நாட்டை அந்நியர்கள் அடிமைப்படுத்திய பின்னர், இந்த நாட்டை விட்டுச் சென்றார்கள். ஆனால், அந்த அந்நியர்கள் போட்ட ஒற்றையாட்சி என்ற கட்டுக்குள்; நாம் இன்னும் இருக்கின்றோம். ஒற்றையாட்சி என்ற கட்டுக்குள் இருந்துகொண்டு, நாம் சிந்திக்கும் நிலையில் இந்த நாட்டுக்கு விமோசனமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது' என்றார்.
'தற்போதைய நல்லாட்சியில் எங்களுக்குப் பிரச்சினைகள் இல்லை என்று நாம் எண்ணுகின்றோம். இது நீடிக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கம் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும். இது தொடர்பில் பல்வேறு விதமான கோணங்களில் பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago