2025 மே 07, புதன்கிழமை

'பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதில் அரசாங்கம் ஏமாற்றுகிறது'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல்  ரீதியான பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என நீண்டிகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக காலத்துக்கு காலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இறுதியில் ஏமாற்றமடைந்ததே வரலாறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு படுவான்கரை மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராயும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செங்கலடி பதுளை வீதியிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து புல்லுமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் கட்டுபாட்டிலிருந்த ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பல வருட காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயற்பட்டாலும் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்காமை குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். இந்நிலையில் தற்போது 20 தமிழ் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதாக பெயர்களை வெளியிட்டுள்ளனர்.

எமது நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஆட்சியார்களும் தமிழ் தலைவர்களுடன் ஆரம்பத்தில் ஒப்பந்தத்தை செய்து அதை நிறைவேற்ற முடியாமல் எதிர்கட்சிகள் தடுக்கின்ற நிலை காணப்படுகிறது.

தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை எமது தலைவர்கள் பேச்சுவார்தை மூலம் எமது பிரச்சிரனைக்கு தீர்வினைப் பெற்றுதர வேண்டும் என்று மாறி மாறி வந்த ஒவ்வாவொரு ஆட்சியார்களுடனும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பேச்சு வார்தைகளில் ஈடுபட்டனர். நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் இடைநடுவே கைவிடப்பட்டதை நாம் கடந்த காலங்களில் அவதானித்துள்ளோம்.

அந்த வகையில், தற்போது தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்ததை மீண்டும் புலிகள் வலுவடைவார்கள் என சிங்கள அரசியல் தலைவர்கள் கூறி மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகிறார்கள். இந்தவிடயத்தில் நாங்கள் சாதுர்யமாக செயற்பட வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X