Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
வறுமையினால் கல்வியினைத் தொடரமுடியாமல் இருக்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான வசதிவாய்ப்புக்களைச் செய்கின்றபோதுதான் அவர்களை சமூகத்தில் ஆரோக்கியமானவர்களாக மாற்றுவது மட்டுமல்லாது கல்வியில் சாதனை படைப்பதற்கான தூண்டுதலாகவும் அமையும் என உவிப் பிரதேசசெயலாளர் என்.நவநீதராசா தெரிவித்தார்.
துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வறுமைகுாட்டுக்குட்பட்ட 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை காலை துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் அவ் அமைப்பின் தலைவர் ஏ.வேளராசு தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
வறுமை கற்றலுக்குத் தடையாக இருக்கக்கூடாது இன்று இளைஞர் அமைப்பு போன்ற சமூக நேய அமைப்புக்கள் கல்விக்காக ஆற்றிவருகின்ற சேவை போற்றத்தக்கது.
இவ்வாறான உதவிகளைப் பெறும் மாணவர்களாகிய நீங்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டில் நல்லதோர் ஆளுமை பண்பு நிறைந்தவர்களாக மாறவேண்டும். அதுமட்டுமல்ல இன்று இளைஞர் அமைப்பினால் நீங்கள் உதவிபெறுவதுபோல் எதிர்காலத்தில் உங்களால் எமது சமூகம் நன்மை அடைய வேண்டும்.
அதற்கு ஒரே ஒருவழி நீங்கள் அனைவரும் கல்வியில் சாதனைபடைத்து சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக மாறவேண்டும் அதற்காக நீங்கள் நன்றாகக் கற்கவேண்டும் என்றார்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago