Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினக் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தத் துடிக்கும் இரட்டைவாதிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பில் அவர் இன்று (6) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சலுகை அரசியல், சந்தர்ப்பவாத அரசியல், பிரித்தாளும் தந்திரம், பரஸ்பர சந்தேகம் ஆகியவற்றால் சிறுபான்மையினச் சமூகங்கள் எதிரும் புதிருமாக உள்ளன. இவ்வாறான நிலைப்பாடுகளே பேரினவாதத்துக்கு வேண்டியவையாகும். ஆயினும், இவ்வாறான நிலைப்பாடுகளை சிறுபான்மையினச் சமூகங்கள் விரும்பியோ, விரும்பாமலோ நிறைவேற்றியுள்ளன' என்றார்.
'சிறுபான்மையினக் கட்சிகளுக்குள் சிலர் மேலும், மேலும் முரண்பாடுகளை ஏற்படுத்தி பேரினவாதத்துக்கு தீனி போட்டு தரகுப்பணம் அல்லது சலுகைகளைப் பெறத் துடிக்கின்றனர். இவ்வாறான சதித்திட்டம் தீட்டி சிறுபான்மையின மக்களுக்கு நன்மை செய்வது போன்று நடித்து, நுட்பமான பொறிமுறை ஊடாகச் பேரினவாதிகளுக்கு உதவுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள், மலையகத் தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தவே விரும்புகின்றனர்.
சிறுபான்மையினம் எவ்வாறு போனாலும் பரவாயில்லை என்பதே இப்படியான சுயநலவாதிகளின் நோக்கமாகும். இவ்வாறான சுயநலவாதிகளின் சுயரூபத்தை சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையின மக்களிலும் கணிசமானவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்' என்றார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025