2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வருக்கு அழைப்பாணை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் மற்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உட்பட 4  பேரை மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்தில் நாளை (8) ஆஜராகுமாறு கூறி  நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (6) அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி  மேற்படி வேலையற்ற பட்டதாரிகள்; நடத்திய கவனயீர்ப்புப் பேரணியின்போது,  மாவட்டச்  செயலகத்துக்கு முன்பாக நின்ற  பொலிஸார் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யவிடாது இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமூகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரகுமாறு கூறி   அழைப்பாணை  அனுப்பப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரி.கிசாந் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X