Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 08 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்; தலைவர் மற்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உட்பட 4 பேரையும் தலா 20,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அனுமதியளித்துள்ளார்.
அத்துடன், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
கடந்த 28ஆம் திகதி மேற்படி வேலையற்ற பட்டதாரிகள்; நடத்திய கவனயீர்ப்புப் பேரணியின்போது, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நின்ற பொலிஸாரையும் மாவட்டச் செயலக அதிகாரிகளையும்; கடமையைச் செய்யவிடாது இவர்கள் இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமூகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து, இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு கூறி நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (6) அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர்கள் நீதிமான்றத்தில் இன்று ஆஜராகியபோது, இவர்களைப் பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.
இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் நடத்திவரும் சத்தியாக்கிரகப் போரட்;டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு பொலிஸார் தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கை நீதவான் எம்.கணேசராஜா நிராகரித்து தள்ளுபடி செய்தார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago