Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
ரயில் கடவைக் காப்பாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிடின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என வடகிழக்கு ரயில் கடவைக் காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் ஏஸ்.ஜே.ரொஹான் ராஸ்குமார் தெரிவித்தார்.
வடகிழக்கு ரயில் கடவைக் காப்பாளர் ஒன்றியத்தின் விசேட கூட்டம் மட்டக்களப்பு, ஊறணியில் செவ்வாய் (4) மாலை நடைபெற்றது.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், 'புதுவருட மற்றும் ஏனைய பண்டிகைக் காலங்களில் எங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும், ரயில் திணைக்கள சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் அல்லாவிடின், வீதி அதிகார சபையில் வீதி பராமரிப்பாளர்களுக்கு இருக்கும் வெற்றிடங்களுக்கு எங்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளோம்' என்றார்.
இப்பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் வேளையில் ரயில் கடவைகள் ஊடாகப் பயணிப்பவர்கள் அவதானமாகப் பயணிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025