Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
வில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டுத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் இந்த ஆட்சி மாற்றத்துக்காக கைகோர்த்த மக்கள் தொடர்ந்தும் கஷ்டங்களுடன் வாழும் நிலைமையை அனுமதிக்க முடியாது. இப்பிரச்சினையை ஜனாதிபதி தனது சொந்தப் பிரச்சினையாகக் கருதி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (4) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்த வில்பத்து விவகாரத்தை வைத்துக்கொண்டு சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய முற்படுவதாகவும் அதனை அக்கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரச்சினைகளுக்குள் வாழும் மக்களை மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளும் வகையிலான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'சிறுபான்மையினச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைமைகள் தங்களுக்கு இடையிலுள்ள அனைத்து முரண்பாடுகளையும் களைந்து, இந்த நல்லாட்சியில் சிறந்த தீர்வை எமது சமூகத்துக்குப் பெற்றுக்கொடுக்கா விட்டால், அச்சமூகத்துக்கு எந்த அரசாங்கத்திலும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்ற விடயத்தை முன்வைத்து ஒன்றுபட்டுச் செயற்பட முன்வரவேண்டும்' என்றார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025