2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'வேலைவாய்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த மாதம் வெளியிடப்படும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்பதுடன், இன்னும் மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவையில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்  சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவுக்கு சனிக்கிழமை (29) வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், மகஜரையும் கையளித்துள்ளபோதே, ஜனாதிபதி; இதனைக் கூறினார்.

எனவே, நீங்கள் வீதியில் இருக்க வேண்டாம் எனவும்   மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X