Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 22 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
விளம்பரங்களில் அல்குர்ஆன் கிராஅத் (ஓதுதலை) பயன்படுத்துவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா (மார்க்க அறிஞர்களின் ஒன்றியம்) பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'நமது பிரதேசத்தில் இடம்பெறும் பொது நிகழ்வுகளிலும் அறிவித்தல் வாகனங்களிலும், சிறிய மற்றும் பெரிய நிகழ்வுகள் இடம்பெறும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், அந்த நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக புனித அல்குர்ஆன் ஓதலை (கிராஅத்) ஒலிபரப்புச் செய்வது வழமையாக உள்ளது.
ஆயினும், இத்தகைய நடைமுறையானது, புனித கண்ணியமிக்க அல்குர்ஆனுக்கு நாம் வழங்க வேண்டிய கண்ணியத்தை குறைத்து மதிப்பிடுவதாக கருதவேண்டியுள்ளது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, விழாக்கள், வைபவங்கள் போன்றவற்றுக்குரிய முன்னறிவிப்பாகவும் வாகனங்களிலும் புனித அல்குர் ஓதுதலை
(கிராஅத்) ஒலிபரப்புச் செய்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு, பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago