2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

100 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 05 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூர்த்தி உதவி பெறும் மேலும் 100 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புப் பெறுவதற்கான கடிதங்கள் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர் சிறுகைத்தொழில் பேட்டையில் மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் யூ.எல்.முஹைதீன்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்புப் பெறுவதற்கான இலவசக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

சமூர்த்தி உதவி பெறும் ஒரு குடும்பத்திற்கு குடிநீர் இணைப்புப் பெறுவதற்காக ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் செலுத்தப்படுகின்றது.

அமைச்சர் நஸீர் அஹமட் தனது சொந்த நிதியிலிருந்து 30 குடும்பங்களுக்கு நிலத்தடி நீர் குழாய்க் கிணறு அமைப்பதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன்பாவா இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை மேலும் 70 குடும்பங்களுக்கு தேசிய நீர் வழங்கலில் இருந்து குழாய் நீர் இணைப்புப் பெறுவதற்கான கட்டணமாக ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X