Princiya Dixci / 2021 மே 12 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 12 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வவுணதீவு பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதுடன், 32 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
50 பொலிஸார் இங்கு கடமையாற்றி வருகின்ற நிலையில், நேற்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் 34 பொலிஸாருக்கு இன்று (12) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு சப் இன்பெக்டர், ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 12 பேருக்கு தொற்றுக் கண்டறியப்பட்டது.
வவுணதீவு பொதுமக்கள் தமது பொலிஸ் சேவையை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வுவுணதீவு பொலிஸ் நிலையத்தை தொற்று நீக்கிய பின்னர் பின்னர் திறப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago