2025 மே 03, சனிக்கிழமை

156 தமிழ் மக்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும்

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

1990ஆம் ஆண்டு கிழக்கு பலக்லைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த 156 தமிழ் மக்கள் காணாமல் போனது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டுமென தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்.யு.குணதாசவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கலாநிதி ஏ.செல்வேந்திரன் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

1990 காலப்பகுதியில் நிலவிய ஒரு அச்சமான சூழ்நிலையில் கிழக்கு பலக்லைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த மாணவர்கள் பொதுமக்கள், அரசாங்க அதிகாரிகள் என 150 தமிழ் மக்கள் காணாமல் போனார்கள். இது பற்றி முழுமையான ஒரு விசாரணை செய்யப்படல் வேண்டும். அத்துடன் மட்டக்களப்பு சத்துருக் கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி, பனிச்சையடி போன்ற  பகுதிகளில் இருந்தும் 183 தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளார்கள்.

இவர்களில் குழந்தைகள் மற்றும் குடும்ப தலைவர்கள், பெண்கள் அடங்குகின்றனர்.

இது பற்றியும் விசாரணை செய்யப்படல் வேண்டும் என ஆணைக்குழுவை கேட்டுள்ளதாக தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X