2025 ஜூலை 26, சனிக்கிழமை

20 மில். அமெரிக்க டொலர் நிதியில் வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு

Editorial   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை, 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் புனரமைப்பதற்கு கொரிய நாட்டு முதலீட்டார்கள் முன்வந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில், வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை புனரமைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து, ஊடகங்களுக்கு இன்று (30) கருத்துரைத்த அவர் மேலும் கூறியதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,500 பேருக்கு மேல் தொழில் வாய்ப்பை வழங்கிய வாழைச்சேனை தேசிய  கடதாசி ஆலை, கடந்த சில வருடங்களாக இயக்கப்பட முடியாத நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

“இந்நிலையில், தேசிய கடதாசி ஆலையை மீண்டும் இயங்க செய்ய வேண்டும் என்பதில்ஈ த.தே. கூ-இன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டுவந்தனர். நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், கடதாசி ஆலையை இயங்க செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்திருந்தனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X