2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கோட்டைக்கல்லாறில் விபத்து: சிறுமி உட்பட மூவர் படுகாயம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 14 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று இரவு 7.45 மணியளவில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றை வான் ஒன்று முந்திச்செல்ல முற்பட்டபோது முச்சக்கர வண்டியை வான் இழுத்துச்சென்று விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் சென்ற சிறுமி ஒருவரும் அவரது தாயாரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.   

படுகாயமடைந்தோர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .