Kogilavani / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு- கல்முனை பிதான நெடுஞ்சாலையில் காட்டாக்காலி மாடுகளினால் இரவு நேர பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
மண்முனைப் பற்று (ஆரையம்பதி) பிரதேசசபைக்குட்பட்ட ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் போன்ற பிரதான வீதியிலும், மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம் போன்ற பிரதான நெடுஞ்சாலையிலும் கட்டாக்காலி மாடுகள் இரவு வேளைகளில் வீதியின் நடுவே குவிந்து கிடப்பதினால் இரவில் பயணிக்கும் பயணிகள் பல அசௌகரியங்களுக்குட்பட்டு வருகின்றனர்.
நீண்டகாலமாக மாடுகள் இரவில் குவிந்து கிடப்பது பற்றி உரியவர்கள் அறிந்திருந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்காதிருப்பது கவலைதரும் விடையமாகும் என போக்கு வரத்துப் பயணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.
.jpg)
30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago