2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஓட்டமாவடி முஸ்லிம் சம்மேளனம் ஹர்த்தாலுக்கு அழைப்பு

Super User   / 2011 மே 08 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர். அனுருத்தன்)

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆற்றுச்சேனை மாக்குப்தா விவசாயக் காணிகளில் அனுமதி பத்திரம் இன்றி குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஓட்டமாவடி பிரதேச விவசாயிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கிரான் பிரதேச செயலாளர் தீர்மானித்ததைக் கண்டித்து நாளை ஹர்த்தால் மேற்கொள்ள  ஓட்டமாவடி முஸ்லிம் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூடட்டத்தில் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாகவும் அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக கிரான் பிரதேச செயலக பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள கள்ளிச்சை, வடமுனை, ஊத்துச்சேனை, முதலான கிராம சேவகர் பிரிவுகள் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இனைக்கப்பட வேண்டும் எனவும் மேற்படி விவசாய நிலங்களில் குடியேற அனுமதி அளிக்கவேண்டும் எனவும் அம்மகஜரில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .