Menaka Mookandi / 2011 மே 09 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் அத்துமீறிய குடியேற்றங்கள் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றபெயரிலான காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசுடன் நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சின் போது வலியுறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சின் போதே இதனை தாம் வலியுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில், மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களில், பல பிரதேசங்களில் வலுக்கட்டாயமாக குடியேறி வருவதுடன், அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்பட்டும் வருகின்றன. அத்துடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பாரியளவிலான காணி அபகரிப்பு திட்டமிட்ட குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்ல காணி அபகரிப்புகள் நடைபெற்று வருகின்ற பிரதேசம் ஒன்றில், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க இருந்த பிரதேச செயலாளருக்கு பல்வேறு வகையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதுடன், அதற்கெதிராக போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.
இந்தத் திட்டமிட்ட குடியேற்றம், அதியுயர் பாதுகாப்பு வலய விஸ்தரிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவுறும்வரை இடைநிறுத்தி வைக்க அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.
46 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
15 Apr 2026