Super User / 2011 மே 10 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஹர்தால் கடையடைப்பானது தமிழ் மக்களுக்கெதிரான ஹர்தால் அல்ல என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அது ஒரு அதிகாரிக்கெதிரான ஹர்தாலாகும். தமிழ் மக்களுக்கெதிரான ஹர்தால் என்றால் காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் கடைகளை பூட்டி ஹர்தால் செய்திருப்பார்கள்.
இது அவ்வாறல்ல. தமிழ் மக்களுக்கெதிரான ஹர்தாலாக இதை பார்க்க வேண்டாம். சிலர் இந்த ஹர்தாலை தமிழ் மக்களுக்கெதிரான ஹர்தாலாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றார்கள்.
இந்த ஹர்தால் கடையடைப்பில் வாழைச்சேனையிலுள்ள 35 வீதமான தமிழ் வர்த்தகர்களும் கடைகளை மூடி ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய காணிகளில் விவசாயம் செய்வதற்குள்ள தடைகளை நீக்க கோரியே இந்த ஹர்தால் கடையடைப்பில் ஈடுபட்டனர் என கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.
குறித்த காணி பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து தீர்த்து வைப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது.
இக்குழு எதிர்வரும் ஐந்து தினங்களுக்குள் கூடி இதை ஆராய்ந்து தீர்த்துவைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
47 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
15 Apr 2026