2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கல்குடா தேர்தல் தொகுதியில் மு.கா அமைப்பாளரை தெரிவுசெய்வதற்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மே 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு கல்குடா  தேர்தல் தொகுதியில்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான அமைப்பாளரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

பிரைந்துரைச்சேனை சாதுலிய்யா வித்தியாலத்தில் ரீ.எல்.எம்.தன்ஸீல் தலைமையில் நாளை வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு
இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கல்குடா தொகுதி அமைப்பாளர் மற்றும் இணைப்பாளர்கள் தெரிவும் நடைபெறவுள்ளது. அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி ஆராயவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதில் கட்சிஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .