Kogilavani / 2011 மே 11 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களை வெளியேற்றியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சுகாதார அமைச்சு அதிகாரிகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்புக்கு வருகை தந்த 5 பேரடங்கிய அதிகாரிகள் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று சந்தித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து அக் குழுவினர் வைத்தியசாலைக்கும் விஜயம் செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 7 ஆம் விடுதியில் கடந்த 5 ஆம் திகதி காலை மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட இரு கர்ப்பிணித் தாய்மார்கள் புதிதாக இவ்வைத்தியசாலையில் பதவியேற்ற மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவரால் 6ஆம் திகதி வெளியேற்றப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஜித் மெண்டிஸ் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago