Menaka Mookandi / 2011 மே 12 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
கிழக்கு மாகாண பட்டதாரிகளை மாகாண சபையின் திட்டமிடல் பிரிவு பதிவு செய்து வருகின்றது. இந்தப் பதிவுகளுக்கு எந்தவிதமான கால எல்லையும் இல்லை என கிழக்கு மாகாண திட்டமிடல் பிரிவுத் தகவல்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொள்வதற்காக அதிக பணங்களைச் செலவுசெய்து திருகோணமலை சென்று பதிவுகளை மேற்கொண்டு வருவதுடன், முடிவுத்திகதிகள் உள்ளதாக எண்ணி விரைவாகப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என முயற்சித்து வருகின்றனர்.
திட்டமிடல் பணிப்பாளரின் பணிப்பிற்கமைய நடைபெற்றுவரும் இந்தப் பதிவுகள் எந்தவிதக் காலக்கட்டுப்பாடும் இன்றி நடைபெற்று வருகின்றன. பட்டதாரிகளின் தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்காகவே இப்பதிவுகள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளான இவர்கள் தமது பதிவுகளை மேற்கொள்வதற்காக திருமலை சென்று வருவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பில் பிரிவு ஒன்றினை ஏற்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு பட்டதாரிகள் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago