Menaka Mookandi / 2011 மே 12 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் நடைமுறைப்படுத்திவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் மாவட்டத்தின் தேவைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டன. மாவட்ட திட்ட பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் கே.கமலதாஸ் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago