Suganthini Ratnam / 2012 மார்ச் 16 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தின் மாவட்ட காரியாலயம் திறக்கப்படாமல் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கடற்றொழில் சம்மேளனத்தின் அலுவலகக் கட்டிடத்தை கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன திறந்துவைத்தார்.
இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளதாக மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். இக்கட்டிடம் திறக்கப்படாததால் மீனவர்கள் தமது எரிபொருள் மானிய விண்ணப்பப் பத்திரத்தில் மாவட்ட கடற்றொழில் அமைப்பு நிர்வாகிகளின் சிபாரிசு கையொப்பம் பெறுவதற்காக அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர் விவேகனந்தாராசா மற்றும் அதன் செயலாளர் எம்.முனாபரிடம் கேட்டபோது, இக்காரியாலய கட்டிடத்தில் செயற்படுவதற்கான வசதி வாய்ப்புக்கள் இன்னும் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதன் காரணமாகவே இக்கட்டிடம் திறக்கப்படாதுள்ளது. இக்கட்டிடம் திறக்கப்படாவிட்டாலும் மீனவர்களுக்குரிய வேலைகளை நாங்கள் செய்துகொடுக்கின்றோம் என கூறினர்.
31 minute ago
51 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
51 minute ago
52 minute ago
57 minute ago