Kogilavani / 2012 மார்ச் 16 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
வவுணதீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை பகல் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இப்பிரதேச செயலகப்பிரிவிற்கென ஒதுக்கீடுசெய்யப்பட்ட திவிநெகு திட்டத்தின் 59 இலட்சம் ரூபா, நாடாளுமன்ற உறுப்பினர்களின் 16 இலட்சம் ரூபா, கமநெகும திட்டத்தின் 330 இலட்சம் ரூபா ஆகியவற்றின் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் வவுனதீவு பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு மில்லியன் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
19 minute ago
39 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
40 minute ago
45 minute ago