2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு.வாவியில் படியும் பாரியளவிலான பாசியினால் மீனவர்கள் பெரும் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியின் மேல் படிந்துவரும் பாரியளவிலான பாசியினால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதுடன் வாவியின் இயற்கை அழகிற்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மீன்பாடும் தேனாடு என மட்டக்களப்பு அழைக்கப்படுவதற்கு பிரதான காரணமான இவ்வாவியின் அழகை  ரசிப்பதற்கு பல உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் வருகை தருகின்றனர்.

ஆனால் வாவியோ பாசியினால் மூடப்பட்டு மிகவும் அருவருப்பாக காட்சி தருகின்றது. மட்டுமன்றி மீனவர்களும் தமது தோணி மற்றும் வலைகளைக் கொண்டு மீன் பிடிக்க முடியாத நிலைக்கு வாவி மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த இயற்கை அழகு ததும்பும் வாவியின் மேலுள்ள பாசியினை அகற்றித்தருமாறு மீனவர்குளம் இயற்கை அழகு ரசிப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .