2026 மே 04, திங்கட்கிழமை

களுவன்கேணிக் கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

Kogilavani   / 2012 மார்ச் 23 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்,ஜிப்ரான்,சுக்ரி)

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரக்காந்தன் நேற்று வியாழக்கிமை களுவன்கேணிக் கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது அவர் கிராமத்தின்  பல பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களது அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

இக்கிராமத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள கிராமி உள்வீதிகளை புனரமைத்தல், மின்சார வசதி, சில வீதிகளுக்கான கல்வெட்டுக்களை  அமைத்தல் தொடர்பாக மக்களுடன் கலந்துறையாடினார்.

இதனடிப்படையில் களுவன்கேணி தளவாய் இணைப்பு வீதி, சிங்காரத்தோப்பு கிராமத்திற்கு மின்சார வசதி,  களுவன்கேணி தோணா வீதிக்கான கல்வெட்டு என்பனவற்றை உடனடியாக ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிதம்பரப்பிள்ளை வினோத் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .