2026 மே 04, திங்கட்கிழமை

ஆசிரிய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தின் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி,கே.எஸ்.வதனகுமார்,ரி.லோஹித்)

ஆசிரிய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நடமாடும் சேவை மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாளை திங்கட்கிழமை முடிவடையவுள்ள இந்த நடமாடும் சேவையில் ஆசிரியர்களுக்கான கடன் வழங்குதல், ஆசிரியர்களின் நலன்புரி நடவடிக்கைகள், ஆசிரியர் நலன்சார்ந்த பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கொழும்புக்கு வந்து தமது தேவைகளை நிறைவு செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்நடமாடும் சேவையை மட்டக்களப்பில் நடத்தப்பட்டதாக இதன் உபதலைவர் தெரிவித்தார்.

ஆசிரிய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தின் உதவித்தலைவர் வசந்த குணசேகர தலைமையில் ஆரம்பமான வைபவத்தில் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி,  உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .