2026 மே 04, திங்கட்கிழமை

செஞ்சிலுவைச் சங்கத்தின் கொள்கைகள், வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் வேலைத்திட்டங்களை முக்கியஸ்தர்களுக்கு விளக்கும் கருத்தரங்குகள்  மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி பலநோக்கு மண்டபத்தில் கருத்தரங்கொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதித் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.கஜேந்திரன் விளக்கமளித்தார்.

இதில் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .