2026 மே 04, திங்கட்கிழமை

ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் - பத்மநாபா அணி சந்திப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) சுரேஷ் அணியும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியும் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை கலந்துரையாடியுள்ளனர். 

ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் மட்டு - அம்பாறை மாவட்ட தலைவர் இரா.துரைரெத்தினத்துக்கும் இடையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்புக்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

இச்சந்திப்பில் அக்கட்சியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணியின் செயலாளர் சுரேஷ்; பிரேமச்சந்திரனுக்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் மக்களின் பொதுவான நலன் தொடர்பிலும் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம். ஆனால் இவை தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .