2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மத்தி கல்வி வலயப் பிரச்சினைகளை ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப் பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம் ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள், சிற்றூழியர் வெற்றிடங்கள்,  பாடசாலைகளுக்குத் தேவையான  கட்டிடங்கள், சுற்றுமதில்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது  முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு 29 ஆசிரியர்களை உடனடியாக வழங்குவதாகவும் இதில் 15 கணிதபாட ஆசிரியர்களும் 14 ஆங்கிலபாட ஆசிரியர்களையும் மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், மட்டக்களப்பு வலயத்தில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை வலயத்திற்குள்ளேயே இடமாற்றுவது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டன.

ஏனைய பிரச்சினைகள் தொடர்பில்  எதிர்காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் அமைச்சரும் தற்போதைய தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார, சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ரி.நிசாம், மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ.போல்,; மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் யு.எல்.செயினுதீன்,  உதவி கல்விப்பணிப்பாளர்கள், மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள  பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .