2026 மே 04, திங்கட்கிழமை

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 27 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை  இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில்,  மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டர்ரக வாகனத்தின் மீது கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் காரில் பயணித்தவர்களே இவ்விபத்தில் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதி தூக்கத்திலிருந்தாககவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .