2026 மே 04, திங்கட்கிழமை

வவுணதீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் லீமா என அழைக்கப்பட்ட முகாம் பகுதியில் இருந்து ஒருதொகுதி ஆயுதங்கள் பொலிஸாரினால்  நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சோதனை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது ஒரு கைக்குண்டு, 213 ரி 56ரக துப்பாக்கித் தோட்டாக்கள், மகசின்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோனின் ஆலோசனையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்னவின் வழிநடத்தலில் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரகீம், பதில் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத்தர்களான ரத்நாயக்க, சுபியான், கேரத் ஆகியோர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் பல ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .