2026 மே 04, திங்கட்கிழமை

வவுணதீவில் யூத் ஸ்ரீலங்கா வீடமைப்பு திட்ட அடிக்கல் நாட்டுவிழா

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் யூத் ஸ்ரீலங்கா வீடமைப்பு திட்டத்தின்கீழ் இன்று காலை வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழக்காலையில் வறிய யுவதி ஒருவருக்கு வீடு நிர்மாணிப்பதற்கான அடிகல் நாட்டுவிழா இளைஞர் சேவை அலுவலகர் மா.சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இன்று காலை 8.49 மணிக்கு நாடளவிய ரீதியில் 332 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 332 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக வளங்கப்படும் 125,000 ரூபா பணத்தினைக் கொண்டு வெளியோரின் நன்கொடைகளினூடாக 850,000ரூபா பெறுமதியான வீடினை நிர்மாணிக்கும் பணியே இதனூடாக இடம்பெற உள்ளது.

வவுணதீவு செயலகப் பிரிவில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதமவிருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளருமாகிய செல்வி.க.தங்கேஸ்வரி கலந்து கொண்டு அடிகல் நாட்டிவைத்தார்.

அத்துடன் சிறப்பு விருந்தினராக பிரதேச சபைத் தவிசாளர் திரு.கா.சுப்பிரமணியம், கௌரவ விருந்தினராக பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் தெ.சசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் பிரதேச பொது அமைப்புக்கிளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .