2026 மே 04, திங்கட்கிழமை

காந்தி சிலையின் திருத்தப் பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

 
மட்டக்களப்பு நகரின் காந்தி சதுக்கத்தில் கடந்த வியாழக்கிழமை உடைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை திருத்தும் பணிகள் இன்று சனிக்கிழமை நடைபெற்றன. இச்சிலை திருத்த வேலைகளை மாநகர சபையினர் மேற்கொண்டனர்.
 
மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டிருந்த இந்தியப் பெருந்தலைவரும் சமாதானத்தின் சாத்வீகப் போராட்டத் தந்தையுமான மகாத்மா காந்தியின் சிலை, சாரண இயக்கத்தின் தந்தையான பேடண் பவல் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட சிலை, மட்டக்களப்பில் மாத்திரமல்ல உலகறிந்த தமிழ் அறிஞரும் துறவியுமான விபுலானந்தரின் சிலை, மற்றும் பெரும் தமிழ் அறிஞரும் சிறந்த தமிழ் இலக்கியச் செம்மலுமான புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.
 
இச்சிலை உடைப்பு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்ற போதும் இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .