2026 மே 04, திங்கட்கிழமை

வீட்டின் மீது இடி, மின்னல் தாக்கம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை விநாயகபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றின் மீது இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக அவ்வீட்டிலிருந்த மின்பாவனைப் பொருட்களும் உடுதுணிகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது இவ்வீட்டின் மீது இடி, மின்னல் தாக்கியதாகவும் இதன்போது வீட்டிலிருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் கூடிய மின்னல் தாக்கம் காரணமாக பல வீடுகளில் மின்பாவனைப் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .