2026 மே 04, திங்கட்கிழமை

தம்புள்ள பள்ளிவாசல் உள்ள இடத்திலேயே இருக்க வேண்டும்: கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றல்

Super User   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

தம்புள்ள பள்ளிவாசல் உள்ள இடத்திலேயே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

தம்புள்ள பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டதை கண்டிக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றமாறு கோரும் பிரேரணையொன்று தன்னால் சமர்ப்பிக்கப்பட்டது என மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

இந்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதத்தின் முடிவில் கண்டன தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இந்த கண்டன தீர்மான நிறைவேற்றம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு  கடிதமொன்றை அனுப்புவது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது என ஜவாஹிர் சாலி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .