2026 மே 04, திங்கட்கிழமை

விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி திறப்பு

Super User   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய மாணவர்களின் கணிணி அறிவை விருத்தி செய்யும் முகமாக சமூக நலன்புரி அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியின் புதுக்குடியிருப்பில் புலம்பெயர் மக்களின் பேராதரவுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சமூக நலன்புரி அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் லண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணன், தாழங்குடா கல்விக் கல்லூரி பீடாதிபதி பாக்கியராசா, மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் சிவகுணம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .