2026 மே 04, திங்கட்கிழமை

செல்லையா இராஜதுரை உரையாற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுதினக் கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையைக் கண்டித்து  மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுதினக் கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரையை உரையாற்றவிடாது ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவாஜிலிங்கத்திற்கு எதிரான  சுலோகங்களை தாங்கியவாறு நின்றதுடன் அவரின் கொடும்பாவியையும் எரித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .