2026 மே 04, திங்கட்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் தம்பலவத்தை பாடசாலை வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜெய்க்கா திட்டத்தின் கீழ் 16.15 மில்லியன் ரூபா செலவில் 2.7கிலோமீற்றர் வீதி இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பிரதி செயலாளர் எம்.ஸலாவதீன் உட்பட பலர் கல்ந்து கொண்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .