2026 மே 04, திங்கட்கிழமை

உலக தமிழ் இலக்கிய மாநாடு குறித்த கலந்துரையாடல்

Kogilavani   / 2012 மே 02 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்தும் உலக தமிழ் இலக்கிய மாநாடு எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில் இதுத் தொடர்பில் கிழக்கு தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள கலை இலக்கியவாதிகள், எழுத்தாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கையினை கொழும்பு தமிழ்ச்சங்க பிரதி நிதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடியிலுள்ள இலக்கியவாதிகள், கலைஞர்கள் எழுத்தாளர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கொழும்பு தமிழ் சங்கத்தின் மாநாட்டு ஏற்பாட்டு குழு செயலாளர் ரி.ஞானசேகரன், சங்கத்தின் உப தலைவர் சட்டத்தரணி எம்.ராஜகுலேந்திரன், மற்றும் எம்.ஜின்னா சரிப்தீன், செங்கதிர் சஞ்சிகை ஆசிரியர் எஸ்.கோபலகிருஸ்னன் உட்பட எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நடைபெறவுள்ள உலக தமிழ் இலக்கிய மாநாடு குறித்து கலந்துரையாடப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .