2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி, மண்முனை வடக்கு, ஆரையம்பதி பிரதேசங்களில் எல்லை பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,
ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு, ஆரையம்பதி பிரதேசங்களின் எல்லைப் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்பதென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

மிக நீண்ட காலமாக இருந்து வரும் காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு, ஆரையம்பதி பிரதேசங்களின் எல்லைப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பிரதியமைசசர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், பூ.பிரசாந்தன், இரா.துரைரட்னம், எம்.மாசிலாமனி, மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் திருமதி கிறிஸ்டினா சசிகரன் உட்பட இப்பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட நில அளவை உதவி அத்தியட்சகர், மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்ட மிடல் பணிப்பாளர்,  உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது  மட்டக்களப்பு மாவட்ட நில அளவைகள் திணைக்கள ஆணையாளர் வீரசிங்க இரண்டு எல்லைகள் குறித்ததான விளக்கத்தினை வழங்கிதுடன், வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்தாலன்றி தம்மால் இந்த எல்லையை வரையறுக்க முடியும் என தெரிவித்தார்.

இதற்கான  நிரந்தரமான தீர்வொன்றை இக் கூட்டத்தில் எடுக்க முடியாத நிலையில் இப்பிரச்சினைக்கு சட்ட ரீதியான தீர்வை பெறுவது என கூட்டத்தின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த பிரதேசங்களின் எல்லைப்பிரச்சினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .