2026 மே 04, திங்கட்கிழமை

சர்வமத பேரவையின் ஒன்று கூடல்

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் ஒன்று கூடல் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு கத்தோலிக்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஒன்று கூடலில் தேசிய சமாதான பேரவையின் செயற் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரட்ன, எஹெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் உட்பட சமய பிரமுகர்கள் சமூக பிரதிநிதிகள் தேசிய சமாதான பேரவையின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட சர்வமத பேரவை மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடு போன்றவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .